சர்ச்க்கு வரும் பெண்களிடம் நம்பர் வாங்கி செல் போனில் ஆபாசமாக பேசிய மதபோதகர்!

Published:

asok-Stephanie

நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே முடியகம்பை பகுதியை சேர்ந்தவர் அசோக் ஸ்டீபன் (59). கிறிஸ்தவ மதபோதகரான இவர், அதே பகுதியில் பெதஸ்தா சபையை நடத்தி வருகிறார். ஜெபம் செய்ய சபைக்கு வரும் பெண்களிடம், செல்போன் எண் வாங்கி ஸ்டீபன் ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அவர் ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவை, சில பெண்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். மேலும் மதபோதகர் அசோக் ஸ்டீபன் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்து அமைப்பினர் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் மதபோதகர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் முன்விரோதம் காரணமாக தனது கார் கண்ணாடியை உடைத்ததாகவும், வீட்டுக்குள் புகுந்து என்னை கையை பிடித்து இழுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, மதபோதகர் ஸ்டீபன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அப்போது, போலீஸ் நிலையத்தின் முன்பு ஹிந்து அமைப்பினர் திரண்டு மதபோதகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ashok-st

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர்.

பின்னர் மதபோதகர் குன்னூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பின்பு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அசோக் ஸ்டிபன் கட்டியுள்ள சர்ச் ஓடையிலே ஆக்கிரமித்து கட்டி உள்ளதால், மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மனு அளிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img