மரணம் கூட பிரிக்கவில்லை: கணவரின் இறுதிச் சடங்கில் மயங்கி விழுந்து உயிரிழந்த மனைவி!

Published:

dead body 1

கணவரின் இறுதிச்சடங்கின்போது கோடித்துணி போர்த்தியபோது துக்கம் தாங்காமல் மயங்கி விழுந்து மனைவியும் உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காசான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சேதுமணியன்(வயது 94) இவரது மனைவி கமலம் (வயது 88). சேதுமணியன் கிராமத்தில் பெரிய நிலக்கிழாராக வசித்து வந்துள்ளார். இவருக்கு 6 மகள்கள் உள்ளனர்.

வயது முதிர்வு காரணமாக நேற்று சேதுமணியன் உயிரிழந்தார். இதனால் சேதுமணியின் குடும்பத்தினர் துயரத்தில் இருந்தனர். அதே நேரத்தில் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை சேதுமணியனை அடக்கம் செய்வதற்காக சடங்குகள் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது கோடித்துணி போர்த்திய போது கணவர் உடலை பார்த்து கதறி அழுது கொண்டிருந்த அவரின் மனைவி கமலம் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி நிறுத்திப்பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவத்தால் காசான்கோட்டை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Related articles

Recent articles

spot_img