மோடி பிறந்த நாள்; பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம்!

சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்
pudukkottai-bjp
pudukkottai-bjp

புதுக்கோட்டையில் பிரதமர் மோடியின்
70 வது பிறந்தநாளை முன்னிட்டு, பெண் குழந்தைகளுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்கிக் கொடுக்கப் பட்டது.

புதுக்கோட்டையில் பாரத பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை யொட்டி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வழிகாட்டுதலின் படி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ஏவிசிசி. ஆர்.கணேசன் தலைமையில் நகரத் தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் லெட்சுமணன் முன்னிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70 வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி 70 பெண் குழந்தைகளுக்கு அஞ்சலக நிலையங்களில் செல்வமகள் திட்டத்தில் நபர் ஒருவருக்கு ரூ. 250 வீதம் தானே செலுத்தி 70 பெண் குழந்தைகளுக்கு புதிதாக சேமிப்புக் கணக்கை ஏவிசிசி. ஆர்.கணேசன் தொடங்கி வைத்தார்.

பாரதப் பிரதமர் மோடி மோடியின் 70 வது பிறந்த நாளை 10 நாட்கள் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
பிரதமர் மோடியின் பெயருக்கு அனைத்து ஆலயங் களிலும் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். இதில் பாஜக. நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

  • செய்தி: தனபால், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.