அக்.14: தமிழகத்தில் இன்று… 4462 பேருக்கு கொரோனா; 52 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம்
corona-image
corona-image

தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 462 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது கொரோனா வைரஸ் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

தமிழகத்தில்  ஒரே நாளில் புதிதாக 4 ஆயிரத்து 462 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து தமிழகத்தில் இதுவரையிலான கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6,70,392 ஆனது.

சென்னையில் புதிதாக 1,130 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதை அடுத்து சென்னையில்  இதுவரையிலான கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,85,573 ஆக உயர்ந்தது.

சென்னையில் 11 பேர் உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 52 பேர் உயிரிழந்தனர். 21 பேர் தனியார் மருத்துவ மனைகளிலும், 31 பேர் அரசு பொதுமருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால் கொரோனா பாதிப்புக்கு தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,423 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 83 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதை அடுத்து, கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டோரின் எண்ணிக்கை 6,17,403  ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

district-wise-corona-affected-details-oct-14
district-wise-corona-affected-details-oct-14

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.