விலை உயர்வு எதிரொலி! பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை நிறுத்தம்!

சற்றுமுன்
தமிழகத்தில் அங்கன்வாடி குழந்தைகள் முதல் 10ம் வகுப்பு வரை வாரத்திற்கு 5நாட்களுக்கு ஒரு கோடி முட்டைகளை தனியார் ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருகிறது. ஒப்பந்த நிறுவனம் ஒரு முட்டையை ரூ.4.35க்கு நிர்ணயம் செய்து ஒப்பந்தம் பெற்று உள்ளது. 

ஆனால் தற்போது ஒரு முட்டை ரூ.5.16க்கு சந்தையில் விற்கப்படுகிறது. இதனால் ஒப்பந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுவதால் முட்டை சப்ளை திடீரென்று நிறுத்தி விட்டது. திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளுக்கு பள்ளிகளுக்கு சப்ளை செய்ய வெள்ளிகிழமை அன்று முட்டைகள் வந்து சேரும். ஆனால் இன்று வரை முட்டைகள் வரவில்லை.

இதனால் முட்டைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.