குற்றாலம் அருவிக்கரைகளில் பெண்கள் சோமவார வழிபாடு

சற்றுமுன்
குற்றாலம் அருவிக்கரைகளில் பெண்கள் சோமவார வழிபாடு குற்றாலத்தில்  ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து  திங்கட்கிழமைகளிலும் சோமவார பூஜையில் பெண்கள் ஈடுபடுவது வழக்கம். அன்று அதிகாலை எழுந்து நீர்நிலைகளில் நீராடி புண்ணிய  தலங்களில் பூஜை செய்தால் கணவருக்கு நீண்ட ஆயுள் குழந்தை மற்றும் திருமணம் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.  
அதன்படி இன்று சோம வாரம் தொடங்கியதால் நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த  குற்றாலத்தில் அதிகாலை சுமார் 3 மணியில் முதலே  ஏராளமான பெண்கள் குற்றாலம் அருவிக்கரையில் குவிந்தனர்   அருவிகளில் குளித்துவிட்டு அருவிக்கரைக்கு அருகே உள்ள விநாயகர்மற்றும் நாககன்னிகளுக்கு பெண்கள்  பூஜை செய்து வழிபட்டனர்
விநாயகருக்கு அருகம்புல்லும், நாககன்னிகளுக்கு மஞ்சள், குங்குமம், பழம் படைத்தும், நெய் தீபம் ஏற்றியும், அரச மரத்தை 11 முறை சுற்றி மஞ்சளை எரிந்தும் பெண்கள் வழிபட்டனர் . இந்த பூஜையில் நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்   
பெண்கள் மட்டுமே நீர் நிலைகளில் குளித்து வழிபடும் வழிபாடு என்பதால் குற்றாலம் பேரருவியில் காலை 6 மணி வரை ஆண்கள் குளிப்பதற்கு குற்றாலம் காவல் துறையினர்  தடை விதித்திருந்தனர் , தற்போது சபரி மலை அய்யப்பன் சீசன் தொடங்கி இருப்பதால் அய்யப்ப பக்தர்கள் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது.அதிகாலை 2 மணியில் இருந்தே குற்றாலம் காவவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.