இன்று நெல்லையில் உள்ள புகழ்பெற்ற சுவாமி நெல்லையப்பர் கோவில் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின் போது, தேர் நிலையம் சேரும் வரை எந்த விதமான அசம்பாவிதங்கள் நிகழாமல், அதேநேரம் தடி போடும் ஊழியர்கள் மற்றும் இளைஞர்களை அரவணைத்து, பாதுகாப்பாக தேர் நிலைக்கு சேர உதவிகரமாக இருந்த நெல்லை டவுண் காவல் ஆய்வாளர் சோமசுந்தரத்தை இளைஞர்கள் தோளில் தூக்கிக் கொண்டாடினர்.




