கூம்பு வடிவ குழாய் அகற்றம், சாம கொடைக்கு இடையூறு, விநாயகர் சதுர்த்தி வழக்கு என, தொடர்ந்து இந்து விரோத போக்கில் செயல்படும் (நெல்லை மண்டல மாநாட்டில்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமாரின் பாரபட்சமான இந்து விரோத முகத்திரையைக் கிழித்தற்காக, உச்சங்குளத்தைச் சார்ந்த சாமுவேல்தாஸ் என்பவரிடம் புகாரைப் பெற்று, வி.கே.புரம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் குற்றாலநாதன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
புகார் கொடுத்த சாமுவேல்தாஸ் உச்சங்குளம் சர்ச் பாதிரி மற்றும் காவல் துறை தூண்டுதலில் இந்த பொய் புகாரைக் கொடுத்துள்ளார்.
உச்சங்குளம் சர்ச் பாதிரியார் அங்குள்ள வருவாய்த் துறை குளத்தை ஆக்கிரமித்து அதில் மணல் திருடி சர்ச் கட்டவும் வியாபாரம் செய்யவும் பயண்படுத்தி வருகிறார். சர்ச் இடத்தில் குளத்து மண் குவிக்கப்பட்டுள்ள புகைப்படம் இது…
இந்தக் கனிம வள திருட்டை கண்டு கொள்ளாமல் வழக்கு பதியாமல் இருக்க காவல் துறைக்கு கைமாற்றாகவே இந்த பொய்ப் புகார் அளித்துள்ளார் என்று குற்றம் சாட்டுகிறார்கள் உள்ளூர்வாசிகள். எனவேதான், உச்சங்குளம் பாதிரி உள்ளிட்ட கும்பல் மீது காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையாம்!
வி.கே.புரத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்து முன்னணி மாநாடும் கூட, போலீஸார் திட்டமிட்டுக் கொடுத்த இடத்திலேயே நடைபெற்றது. தூத்துக்குடியில் நிலைமை சரியில்லை என்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை இருப்பதாலும், போலீஸார் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் வேறு இடத்தில் மாநாடு நடத்திக் கொள்ள கேட்டுக் கொண்டனர். அவர்களே பார்த்து அமைத்துக் கொடுத்து, தூத்துக்குடியை விட்டு வெளியில் வெகு தொலைவில் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் இந்த மாநாட்டை தூத்துக்குடி போலீஸாரின் வழிகாட்டலில் நடத்தியுள்ளனர். ஆனால், தற்போது அதற்கும் வழக்கு பதிவு செய்துள்ளது நெல்லை காவல்துறை.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் எப்படிப்பட்ட பாரபட்சமற்ற நேர்மையான நடவடிக்கைக்குச் சொந்தக்காரர் என்பதை இதுவும் காட்டிக் கொடுத்து விடும். பார்க்கத்தானே போகிறோம்..!





