
இந்த நாலு வருடங்களில் ஹிந்துக்களுக்காக மோதி என்ன செய்து விட்டார்? ராமர் கோவிலைக் கூட கட்டமுடியவில்லை. பிறகு எதற்காக ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து மோதிக்கு சப்போர்ட் பண்ணணும்னு ஒருவர் கேட்டிருந்தார்….
மோதிஜி, இந்த நாட்டுக்குப் பிரதமரா இல்லை ஹிந்துக்களுக்கு மட்டும் பிரதமரா?
சாதாரணமா வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கணும்னா கூட முதலில் ஒட்டடை அடிக்கணும், சுவரிலிருக்கும் அநாவசிய கசடுகளை நீக்க வேண்டும். பிறகு பெயிண்ட் அடித்தால் தான் அந்தப் பணி முழுமை பெறும். அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிலந்திகளும் வவ்வால்களும் அசிங்கம் பண்ணி வைத்திருக்கும் இந்த நாட்டினைச் சுத்தம் செய்வதும், அண்டை நாட்டிடம், வர்த்தகம் மற்றும் ராஜ்ஜிய உறவுகளைப் புதுப்பிக்கவும் கடுமையாக வேலை செய்து, அதைச் சாதித்தும் காட்டிக் கொண்டிருக்கிறார் ஒரு பிரதமராக!
நல்ல ஹிந்து, எனக்கு என்ன சலுகை கிடைக்கும் என்று சோம்பிக் கிடக்க மாட்டான். கூடவும் கூடாது. சலுகை என்பது இயலாதவர்களுக்கு மட்டுமே! ராமர் கோவிலை உடனே கட்டாவிட்டால், ஹிந்துக்களும் ஹிந்துத்துவமும் அழிந்துவிடப் போவதில்லை. ஆனால், தேசத்தை மறுசீரமைப்பதில் தாமதம் காட்டினால், தேசத்தைச் சிதறடிக்க நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
முதலில் தேசம் காக்கப்பட வேண்டும். ஒரு உண்மையான ஹிந்து, தனக்காகவும் தன் மதத்திற்காகவும் கையேந்தி நிற்க மாட்டான். மாறாக, தான் வாழும் மண்ணிற் காகவும், அதன் கலாச்சாரம் காக்கவும் தன்னையும் கொடுக்கத் தயாராக இருப்பான்! நம் மண்ணைக் காக்காவிட்டால், நம் மதமோ, நம் குடும்பமோ கூட இதே நிலையில் இருக்காது. மதத்தைக் காக்க வேண்டியது தனிமனித பொறுப்பு. நாட்டை ஆள்பவருடையது அல்ல!
மோதிஜி இந்த மண்ணிற்காகவும் அதன் மாட்சிமையை உயர்த்தவும் உழைத்துக் கொண்டிருக்கிறார். கடப்பாறையைக் கொண்டு பல்குத்த முனையாதீர்கள்!
வந்தே மாதரம்!



