ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் செப்டிக் டேங் அமைக்க குழி தோண்டியபோது கிடைத்த வெடிகுண்டு, ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவற்றை திருவாடானை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் நேரில் பார்வையிட்டார்.
தங்கச்சிமடத்தை அடுத்த அந்தோணியார்புரம் கடற்கரை அருகே எடிசன் என்பவரது வீட்டில் (கழிவறை) செப்டிக் டேங் அமைக்க ள்ளம் தோண்ட முயற்சித்த போது வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள், தோட்டாக்கள் உள்ளிட்டவை கிடைத்தன.
இது குறித்த ஆவணங்களை திருவாடானை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள படி, எடிசன் வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் சரியாக இருக்கின்றனவா என்பது குறித்து நீதிபதி பாலமுருகன் நேரில் சென்று பார்வையிட்டார்.
ராமநாதபுரம் ஆயுதப் படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள தோட்டாக்களையும் நீதிபதி பாலமுருகன் ஆய்வு செய்தார்.




