KUSHBOO சென்னை: காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக குஷ்பு பொறுப்பேற்றபின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கட்சியில் பொறுப்பான பதவியை அன்னை சோனியா தனக்கு அளித்துள்ளார் என்றும், நினைத்துப் பார்த்தால் சிலிர்ப்பதாகவும் கூறினார். கட்சியை முன்னேற்றும் பணியில் ஈடுபடப்போவதாகக் கூறிய அவர், தனக்கு பேசக் கூடிய திறமை உண்டு என்றும், அதனாலேயே தனக்கு இந்தப் பதவி கொடுத்திருக்கிறார்கள் என்றும் கூறினார். காங்கிரஸில் உள்ள அணிகள் குறித்து கேள்வி எழுப்பப் பட்ட போது, நீங்கள்தான் இரு அணிகள் குறித்து சொல்கிறீர்கள். இங்கே இருப்பது ஒரே அணிதான். அது காங்கிரஸ் அணி. ப.சிதம்பரம் இல்லாமல் காங்கிரஸ் இருக்கும், ஆனால், காங்கிரஸ் இல்லாமல் சிதம்பரம்.. என்ன..யாருமே இருக்க முடியாது என்றார் குஷ்பு. காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பது குறித்து கூறப்படும் கருத்தைக் குறித்து கேள்வி எழுப்பப் பட்டபோது, காமராஜும் காங்கிரஸும் ஒன்றுதான். இரண்டும் வேறல்ல, அதனால் காமராஜ் ஆட்சி என்பது காங்கிரஸ் ஆட்சியே என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending