முதல்வருக்கு எதிராகக் குரல்: கன்னட எழுத்தாளர் சிதானந்த மூர்த்தி திடீர் கைது

chidananda-murthy பெங்களூரு: பெங்களூரில் பலராலும் அறியப்பட்ட கன்னட எழுத்தாளர் சிதானந்த மூர்த்தி புதன்கிழமை இன்று பெங்களூரு போலீஸாரால் திடீரென கைது செய்யப்பட்டார். பழம்பெரும் கன்னடக் கவிஞர் தேவரதாசி மையாவின் பிறந்த நாள் நிகழ்ச்சி கன்னட முதல்வர் சித்தராமையாவின் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது 84 வயதான எழுத்தாளர் சிதானந்த மூர்த்தி கைது செய்யப்பட்டார். ஜெதாதேவரதாசி மையாவின் படைப்புகள், தேவரதாசி மையாவின் படைப்புகளைக் காட்டிலும் அதிக வலுவானவை, சமூகத்துக்கு பயனுள்ளவை என்று கூறி, அரசின் தேவரதாசி மையாவின் பிறந்த நாள் விழாக்களுக்கு சிதானந்த மூர்த்தியும் அவரது ஆதரவாளர்களும் எதிர்த்துக் குரல் கொடுத்தனராம். இதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து முதல்வரிடம் ஊடகத்தினர் கேள்வி எழுப்பினர். ஆனால் பதில் அளிக்காமல் அவர் நகர்ந்துவிட்டார். இருப்பினும், சிதானந்த மூர்த்தி கைது செய்யப்பட்ட விதம் தவறானது என்று கர்நாடக கலாசார அமைச்சர் உமா ஸ்ரீ ஊடகத்தினரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான ஜகதீஷ் ஷெட்டர், முன்னணி எழுத்தாளர் சிதானந்த மூர்த்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.