ajith auto - 2026

மயிலாடுதுறையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளான்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் திருவாலங்காடு கிராமத்தை சார்ந்த 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இதே பகுதியில் கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் அஜித் என்பவன் இருக்கிறான். இவன் சம்பவத்தன்று சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான். இதனையடுத்து, பதறிப்போன சிறுமி அங்குள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதனையடுத்து ஆட்டோ அஜித்தை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending