கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளைகள்!

சற்றுமுன் தமிழகம்
well
well

திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றார்.

இந்நிலையில் இவரது ஜல்லிக்கட்டு காளையுடன் அதே பகுதியில் இருக்கும் மற்றொரு காளை சண்டை போட்டுள்ளது. இந்நிலையில் இரண்டுகாளைகளும் ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொண்ட போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த 30 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு செந்தில்குமார் தகவல் கொடுத்துள்ளார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் ஒரு காளையை மீட்ட பிறகு, கயிறு கட்டி ஜல்லிக்கட்டு காளையை வெளியே கொண்டு வந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.