சூடம் ஏற்றி பூத் தூவி கும்பிட்டு… மது வாங்கிக் குடித்த திமுக., பிரமுகர்!

Published:

madurai tasmac sales harathi
madurai tasmac sales harathi

மதுரையில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பு; குறைந்த அளவிலயே வந்து மது வாங்கிச் சென்றனர் மதுக் குடியர்கள்.

கொரோனா ஊரடங்கில் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் மதுரையிலுள்ள அனைத்து மதுபானக் கடைகளும் திறக்கப்பட்டன. கடைகள் முன்பாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மதுக்குடியர்கள் அனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல்நாளான இன்று கடையை திறக்கும் முன்பாக திமுக உறுப்பினர் ஒருவர் கடைக்கு சூடம் ஏற்றி பூ தூவி கும்பிட்டு பின் மதுவை வாங்கி மதுபாட்டில்கள் முன்பாக தரையில் விழுந்து கும்பிட்டுச் சென்றார்.

madurai tasmac sales
madurai tasmac sales

தொடர்ந்து ஏராளமான தொழிலாளர்களும், இளைஞர்களும் காத்திருந்து மதுவை வாங்கிச் சென்றனர். கொரோனா பரவல் 15 ஆயிரம் அளவிற்கு குறைந்த நிலையில் தற்போது மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், அரசின் முடிவை வரவேற்ற மதுக்குடியர்கள், மது தான் எங்களின் மருந்து எனத் தெரிவித்தனர்!

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img