தண்ணீர் தொட்டியில் விழுந்த மாடு! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

சற்றுமுன் தமிழகம்
cow
cow

தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்த காளைமாடு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய குறிச்சி கிராமத்தில் திருமாவளவன் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் தனது விவசாய நிலத்திற்கு அருகில் தரைமட்டத்தில் தண்ணீர் தொட்டி கட்டியுள்ளார்.

இந்நிலையில் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோவில் காளை மாடு மேய்ந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டது.

இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பொது மக்களின் உதவியோடு காளை மாட்டை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.