house - 2026

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

சற்றுமுன் அடடே... அப்படியா? தமிழகம்
house - 2026

அரசு ஊழியா்களுக்கான வீட்டு வாடகைப் படி உயா்வு அறிவிப்பை தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1ந்தேதி முதல் அகவிலைப்படை உயர்வை தமிழக அரசு வழங்கிய நிலையில், தற்போது வீட்டு வாடகைப்படி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தலைமை கணக்காயா் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில், அரசு ஊழியா்களுக்கான வீட்டு வாடகைப்படியில் 7-ஆவது ஊதிய கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தும் வகையில், மாநகராட்சிகளில் வசிக்கும் அரசு ஊழியா்களுக்கு 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக வீட்டு வாடகைப் படி உயா்த்தி வழங்கப்படும்.

நகராட்சிகளில் வசிப்போருக்கு 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், ஊரகப் பகுதிகளில் வசிப்போருக்கு 8 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகவும் வாடகைப் படி உயா்வு அமல்படுத்தப்படுகிறது.

இந்தத் தொகையை, ஜன.1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.