images 20 1 - 2026

இன்று விலை சரிந்த தங்கம்…

சற்றுமுன்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.408 குறைந்து, பவுன் ரூ.40,160க்கு விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,020க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை, ஒரு கிராம் ரூ.74.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த 4 மாதமாக ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
நேற்று விலை அதிகரித்த தங்கம்
இன்று காலை தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடி குறைவை சந்தித்தது. காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.51 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,020 க்கும், சவரனுக்கு ரூ.408 குறைந்து ஒரு சவரன் ரூ.40,160 க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.1.10 குறைந்து, ரூ. 74.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலை ஏற்ற தாழ்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதன் தாக்கம் உலக சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை  ஏற்ற தாழ்வாக காணப்படுகிறது. போர் தொடரும் பட்சத்தில் தங்கம் விலை இதே வேகத்தில் உயர்ந்து கொண்டு தான் இருக்கும். போர் பதற்றம் தணியும் பட்சத்தில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

images 20 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.