24 வயது பெண்ணிற்கு 22 குழந்தைகள்..😳!

Published:

babies - 2026

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ளன. அத்தனை குழந்தையும் 2 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடையவை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது எப்படி சாத்தியமானது, இத்தனை குழந்தைகளை அவர் எப்படி வளர்த்து வருகிறார்?

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஓஸ்டர்க். 24 வயதான இந்தப் பெண்ணுக்கு இப்போது 22 குழந்தைகள் உள்ளன. கிறிஸ்டினாவின் கணவர் பெயர் காலிப். இவர்கள் இருவரும் வாடகை தாய் சிகிச்சை முறையில் 22 குழந்தைகளை பெற்றுள்ளனர். இதற்காக அவர்கள் 195,000 டாலர்களை செலவு செய்துள்ளனர்.

கிறிஸ்டினாவின் இந்த சூப்பர் பெரிய குடும்பம் குறித்த பதிவு அண்மையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரல் ஆனது. இவர்களுக்கு எப்படி இத்தனை குழந்தைகள் என்பதை நெட்டிசன்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.

கிறிஸ்டினாவின் 22 குழந்தைகள் மற்றும் காலிப், அவரது முன்னாள் மனைவி மூலமாக பெற்ற 6 வயது மகள் உள்பட தற்போது ஒரே வீட்டில் 23 குழந்தைகள் வசித்து வருகின்றன.

இதுகுறித்து கிறிஸ்டினா கூறுகையில், “நான் எப்போதும் குழந்தைகளுடனே இருக்கிறேன். ஒரு தாய் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், ஒரேயொரு வேறுபாடு என்ன என்றால், குழந்தைகளின் எண்ணிக்கை தான்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருக்கும். வீட்டு வேலைகளை திட்டமிடுவது முதல் ஷாப்பிங் செல்ல நேரம் ஒதுக்குவது வரை எல்லாமே பரபரப்பாக இருக்கும்.

நான் சுருக்கமாக ஒரு விஷயத்தை குறிப்பிடுவது என்றால், எங்கள் வாழ்க்கையில் ஒரு நாள் கூட போர் அடிக்கவில்லை” என்று கூறுகிறார்.

கிறிஸ்டினாவின் பூர்வீகம் ரஷ்யா ஆகும். மிகப் பெரிய குடும்பம் வேண்டும் என்பதுதான் தனக்கும், தன்னுடைய கணவருக்கும் விருப்பம் என்று அவர் குறிப்பிடுகிறார்.

அதிக குழந்தைகள் வேண்டும் என்று சொன்னபோது, வாடகை தாய் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் அதுகுறித்து ஆச்சரியம் அடைந்ததாக தெரிவித்தார்.

ஆனால், இப்போது உள்ள குழந்தைகள் கிறிஸ்டினாவுக்கு போதாதாம். மொத்தம் 100 குழந்தைகள் வேண்டும் என்பது தான் அவரது கனவாம். அது நடந்தால், உலகின் மிகப் பெரிய குடும்பமாக இவரது குடும்பம் தான் இருக்கும்.

தற்போது கர்ப்பம் அடையும் நோக்கம் இருந்தாலும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள சிரமமாக இருக்கும் என்பதால் அதைத் தவிர்த்து வருவதாகவும், வெகு விரைவில் வாடகை தாய் அடிப்படையில் இன்னும் கூடுதலான குழந்தைகளை பெற்றெடுக்க இருப்பதாகவும் கூறுகிறார் கிறிஸ்டினா.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img