IMG 20220409 WA0091 - 2026

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர்..

சற்றுமுன்

கொளுத்தி எடுத்த கோடை வெயில் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்துவங்கியது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும்.

இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள்.

இதற்கு நேர்மாறாக கோடையில் குற்றாலத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்தது வந்தது.கடந்த சில வாரங்களாக நூறு டிகிரி க்கு மேல் குற்றாலம் மற்றும் சுற்றுப்பகுதியில் வெயில் அனல்காற்றுடன் வீசியது.குற்றால வனப்பகுதியில் தீ பற்றி எரிந்தது. இந்த நிலையில் இருநாட்களாக பரவலாக மழை பெய்தது.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, குற்றாலம் கேரளா வனப்பகுதியில் பரவலாக மழை பெய்தது.

இந்த மழையால் குற்றாலத்தில் இதமான காலநிலை மாலை நேரங்களில் நிலவியது.குற்றாலம் மெயின் அருவியில் ஓரளவு இன்று காலை தண்ணீர் வந்ததால் பலரும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

IMG 20220409 WA0091 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.