pm modi - 2026

மன் கீ பாத்: உங்கள் யோசனைகளை தெரிவியுங்கள்… பிரதமர் ட்விட்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
pm modi - 2026

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பார்.

இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ள மன் கி பாத் நிகழ்ச்சி வரும் 24-ம் தேதி ஒலிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில், தான் என்ன பேசவேண்டும் என்று தாங்கள் விரும்பும் விஷயங்களை தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், இந்த மாதம் 24-ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சி ஒலி பரப்பாகிறது.

இந்த மாத நிகழ்ச்சிக்கு உங்கள் யோசனைகளை வரவேற்கிறேன். அவற்றை நீங்கள் நமோ செயலி அல்லது 1800-11-7800 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.

மேலும் https://mygov.in/group-issue/in என்ற இணைய தளத்திலும் பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.