images 80 - 2026

1 முதல் 12ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு கட்டாயம் உண்டாம்..

சற்றுமுன்

1 முதல் 12 வரை தேர்வுகள் உண்டு என பள்ளி கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இறுதித் தேர்வு கிடையாது. என நேற்று இரவு பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பு வெளியான உடன் பெற்றோர் கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று காலை1முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்துவது குறித்து அந்தந்த பள்ளிகளே முடிவு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

5ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு இல்லை என நேற்றிரவு செய்தி வெளியான நிலையில், 1 முதல் 12ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை இன்று விளக்கமளித்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயம் தேர்வு நடக்கும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் இந்த ஆண்டு இறுதித் தேர்வு நிச்சயம் நடக்கும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தேர்வு அறிவிப்புகள் குறித்து இன்று மாலை அறிவிப்புகள் வெளியாகும். இந்த ஆண்டு குறைந்த கால கட்டமே மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். பாடத் திட்டத்தை ஏற்கனவே குறைத்துள்ளோம். அதன் அடிப்படையில்தான் தேர்வுகளை நடத்த உள்ளோம். இவ்வாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.எப்படியோ மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் போதும் என பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

images 80 - 2026
ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.