dragon 1 - 2026

இணையத்தில் வைரலான வித்தியாச மீன்! ட்ராகன்.. பேய்சுறா.. பெயர் வைக்கும் நெட்டிசன்ஸ்!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
dragon 1 - 2026

குட்டி டிராகன் போல காணப்படும் அரிய வகை உயிரிழனத்தை ரஷ்ய மீனவர் ஒருவர் கடலின் ஆழத்தில் கண்டுபிடித்துள்ளார்,

அதை அனைவரும் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.
இந்த உயிரினத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கடலின் ஆழத்துக்குச் சென்ற அவர் குதிரையின் முகமும், நீளமான காதுகளும் பெரிய கண்களும் கொண்ட உயிரினத்தைக்கண்டறிந்தார்.

சீன திருவிழாக்களில் காணப்படும் டிராகன் போன்று இருந்தது அந்த மீன். அதனை எடுத்து வந்த அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட அந்த புகைப்படம் வைரலானது.

sura drakan - 2026

டிராகன் போன்ற உயிரினம் இதற்கு முன் பலரும் பார்த்திராத ஒன்று. இது சிமேரா அதாவது குருத்தெலும்பு மீன் வகை. இது பேய் சுறா என்றும் அழைக்கப்படுகிறது.

39 வயதான ரோமன் என்ற ரஷ்ய மீனவர் கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்தார், அவரது வலையில் சிக்கியது இந்த புதிய உயிரினம்.

அந்த மீனவர் அழகிய அந்த உயிரினத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பல அரியவகை கடல்வாழ் உயிரினங்களையும் அந்த மீனவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைபடத்தில் நீங்கள் பார்ப்பது புதிய வகை உயிரினம், புதிதாக குஞ்சு பொரித்த முட்டையிலிருந்து ஒரு டிராகன் குட்டி வெளியே வந்தது போல் இந்த உயிரினம் தெரிகிறது..

இந்த புதிய உயிரினத்தை ‘பேபி டிராகன்’ என்று சமூக ஊடகத்தில் மக்கள் அழைக்கின்றனர். அதை பலரும் மிகவும் அதிக அளவில் பகிர்ந்தனர். 22 ஆயிரம் லைக்ஸ்களைப் பெற்றுள்ளது.

drogan - 2026

இந்த மீன் பெரிய கண்கள், நீண்ட வால் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. அதன் உடலில் இறகு போன்ற ஒன்று உள்ளது. அதனால் அது பேபி டிராகன் என்று அழைக்கப்பட்டது. புதிய உயிரினத்தைப் பற்றி அனைவரும் அறிய விரும்பினர்.

இதை பார்த்து சமூக வலைதளங்களில் ஒவ்வொரு வரும் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பலர் இது புதிதாகப் பிறந்த டிராகனாக இருக்கும் எனக் கருத்து தெரிவித்தனர். அவரது புகைப்படம் 22000க்கு மேற்பட்ட லைக்களும் பல கமெண்ட்களும் இடம் பெற்றது.

இது ஒரு பேபி டிராகன் போன்ற கமெண்ட்களுக்கு “இது என்ன வகை மீன் எனத் தெரியவில்லை” எனப் பதிலளித்திருந்தார் ரஷ்ய மீனவர்.

கடலின் ஆழத்தில் மிக அரிதாகக் காணப்படும் இந்த மீன் சுறா வகையைச் சேர்ந்தது. இதனை “பேய் சுறா (ghost shark)” என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனை சிமோரா என்றும் அழைக்கின்றனர்.

ஆழ்கடலில் நாம் இதுவரை கண்டறியாத பல உயிரினங்கள் வசிக்கின்றன

யாராவது ஆச்சரியப்பட்டால், அதன் தோற்றத்தை ஜீரணிக்க முடியாமல் சிலர் இருக்கிறார்கள். சிலரோ சிக்கன் சாண்ட் விச் போல உள்ளதாகவும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.