ஒய்.ஜி.மகேந்திரன் குழு நாடகத்தை நேரில் கண்டு களித்த ரஜினிகாந்த்!

india apartment drama ygm

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குழு அரங்கேற்றிய நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டுகளித்தார்

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குழு அரங்கேற்றிய நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டுகளித்தார். ஒய்.ஜி. மகேந்திரனின் UAA நாடகக் குழு அரங்கேற்றி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நாடகம் திரு 3ஜி. இந்த நாடகமானது தற்கால அரசியல் பற்றியது எனக் கூறப்படுகிறது.

வள்ளுவர் கோட்டத்திலுள்ள PSBB பள்ளியில் இந்த நாடகம் நேற்று அரங்கேற்றப் பட்டது.

இதைக் காண ஒய்.ஜி.மகேந்திரனின் உறவினரும், நடிகருமான ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் சென்றார். நாடகத்தை ரசித்துப் பார்த்த அவர் நாடகத்தில் நடித்த அனைவரையும் தனித்தனியாக சந்தித்து வாழ்த்தினார். அனைவருடனும் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்!

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.