arjun sampath - 2026

EVKS கிழங்கோவனுக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம்!

சற்றுமுன் அரசியல் லைஃப் ஸ்டைல்
arjun sampath - 2026

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில்… ஈ.வெ.ரா.வின் பேரன், பட்டியிலின மக்களின் விரோதி, சோனியா கட்சியின் தலைவர், வாய்க்கொழுப்பு இளங்கோவனுக்கு இ.ம.க கண்டனம் தெரிவிக்கிறது.

பட்டியலின மக்களை சாதி சொல்லி இழிவுபடுத்தும் வேலையை ஈ.வெ.ரா காலம் தொட்டு திராவிட இயக்கங்கள் செய்து வருகின்றன.

இளையராஜா வை சாதி சொல்லி இழிவுபடுத்தி உள்ள இளங்கோவன், கருணாநிதி குடும்பத்தின் சாதியை சொல்லி இழிவுபடுத்தி முன்பு பேசியுள்ளார்.

ஈ.வெ.ரா தாழ்த்தப்பட்ட மக்களை மேலாடை அணிய கூடாது என்று இழிவுபடுத்தி யுள்ளார். பட்டியல் இன மக்களின் விரோதியாக வாழ்ந்து வந்தார்.

ஈ.வெ.ரா.வை தொடர்ந்து அண்ணாதுரை அவர்களும் சாதி வெறியாராக வாழ்ந்தார். தனது திருமண பத்திரிக்கையில் தனது சுய சாதி பெயரை வெளிப்படுத்தினார்.

கருணாநிதி அவர்கள், கனிமொழியின் சமூகத்தை சார்ந்த நாளிதழ்கள் கனிமொழி ஊழல் குறித்து செய்தி வெளியிடலாமா என்று சாதியின் பெயரில் கழிவிரக்கம் தேடினார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

வைகோ, கருணாநிதியின் சாதியை சொல்லி இழிவுபடுத்தி பேசினார்.

ஈ.வெ.ரா வின் கொள்கை வாரிசுகளும், திராவிட இயக்கங்களும் பட்டியல் இன மக்களை இழிவுபடுத்தும் வகையிலேயே செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது ஈ.வெ.ரா வின் பேரன் இளங்கோவன் அவர்கள் இசைஞானி இளையராஜா அவர்களின் சாதியை சொல்லி இழிவுபடுத்தி யுள்ளார்.

சாதி வன்ம பேச்சு பேசியுள்ள இளங்கோவன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து இசை ஞானி இளையராஜா அவர்களை சாதி சொல்லி இழிவுபடுத்தி வரும் மனிதநேய மற்றவர்களை தமிழ் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது.

இளையராஜா அவர்களின் சாதியை இழிவுபடுத்துவோர்களை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்..

இது குறித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை புகார் மனு சமர்ப்பிக்க படுகிறது – என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.