எனக்கு வாக்களிப்பதாக நினைத்து வாக்களியுங்கள்: ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

jayalalithaசென்னை: எனக்கு வாக்களிப்பதாக எண்ணி அதிமுக வேட்பாளர் வளர்மதிக்கு வாக்களியுங்கள் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களாகிய என் அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர, சகோதரிகளே, இளம் தலைமுறையினரே! உங்களில் ஒருவரான உங்கள் அன்புச் சகோதரி, உங்களின் பேராதரவை வேண்டி, மீண்டும் உங்களை இந்த அறிக்கை வாயிலாகத் தொடர்பு கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஸ்ரீரங்கம் என் தாய் மண்; ஸ்ரீரங்கம் என் சொந்த வீடு; ஸ்ரீரங்கம் தலைமுறை தலைமுறையாக என் முன்னோர் வாழ்ந்து வந்த புண்ணிய பூமி. எனவே தான், என் இதயத் துடிப்போடு கலந்துவிட்ட உறவு ஸ்ரீரங்கத்திற்கு உண்டு. 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நான் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட போது, வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், என் மீது அளவில்லா அன்பு கொண்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் இரட்டை இலை' சின்னத்திற்கு வியக்கத் தக்க வாக்கு வித்தியாசத்தை அளித்தீர்கள். என்னுடைய வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு முறையும் நீங்கள் அளித்து வரும் பேராதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகுவதை பொறுத்துக்கொள்ள முடியாத சூழ்ச்சியாளர்களின் சூது மதியால், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் அளித்த வெற்றிச் சின்னமானஇரட்டை இலை’ சின்னம் எந்தத் தொகுதியில், எந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் அங்கே போட்டியிடுவது உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் தான் என்று எண்ணி வாக்களிக்கும் உணர்வு கொண்டவர்கள் எனதருமைத் தமிழக வாக்காளர்கள். இந்தத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களாகிய தாங்கள் அனைவரும் எனக்கே வாக்களிக்கும் எண்ணத்தோடு உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை' சின்னத்தில் அளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நீங்கள் அனைவரும் கண்கூடாக கண்டு வருகிறீர்கள். மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் எண்ணற்ற வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அனைத்தும் ஸ்ரீரங்கம் தொகுதியிலும் தங்கு தடையின்றி நடைபெறுவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அத்தகைய பணிகளோடு பள்ளிகள், கல்லூரிகள், தேசிய சட்டக் கல்லூரி, மாணவர் விடுதிகள், ஏராளமான அரசு கட்டடங்கள், குடிநீர்த் திட்டங்கள், சாலைகள், பாலங்கள் என பல புதிய உள் கட்டமைப்பு வசதிகளும், தொலை நோக்கு திட்டங்களும் ஏராளமாக ஸ்ரீரங்கம் தொகுதியில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனது முயற்சிகளுக்கு மேலும் உற்சாகம் தரும் வகையில் இந்த இடைத் தேர்தலில், கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில்இரட்டை இலை’ சின்னத்தை மகத்தான வெற்றி பெறச் செய்வதோடு, எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று எனதருமை வாக்காளப் பெருமக்களாகிய உங்களை மீண்டும் ஒரு முறை அன்போடு வேண்டி கேட்டுக் கொள்கிறேன். ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகின்ற 13.2.2015 அன்று நடைபெற உள்ள இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் அன்புச் சகோதரி வளர்மதி அவர்களுக்கு நீங்கள் இரட்டை இலை' சின்னத்தில் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், உங்கள் அன்புச் சகோதரியாகிய எனக்கு அளிக்கும் வாக்காகவே கருதப்படும். எனவே, நானே போட்டியிடுவதாகக் கருதி,இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்யுங்கள். – இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories