images 6 1 - 2026

சபரிமலை ஐயப்பன் கோயில் வைகாசி மாத பூஜைக்காக நடை திறப்பு..

சற்றுமுன்

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.கோயில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி மூலஸ்தானத்தில் ஐயப்பனின் தவ கோலத்தை களைந்து நெய் தீபம் ஏற்றி தேங்காய் ஆழியில்
தீபமேற்றி வைத்தார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.இது தவிர ஒவ்வொரு தமிழ்மாத முதல் நாளிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி
இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நாளை 15-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.ஐயப்பனுக்கு பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.வரும் மே 19-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் கோவிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கலாம்.19–ம் தேதி வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை முதல் ஐந்து நாட்களிலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட பிறகு கோவிலுக்கு செல்ல கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். வைகாசி மாத பூஜையிலும் அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வைகாசி மாத பூஜைகள் முடிந்த பின்பு ஜூன் மாதம் 8-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.
கோவில் சிலை பிரதிஷ்டை விழாஜூன் 9இல் நடைபெறும். இதற்காக ஜூன் 8 மாலை நடை திறந்து 9-ந்தேதி கோவில் நடை திறந்து பிரதிஷ்டை தின பூஜை வழிபாடுகள் நடைபெறும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

images 6 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.