அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்?-உச்சநீதிமன்றம் ..

Published:

1789103 courtd 1 - 2026

அருண் கோயலை அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக 1985 பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 37 ஆண்டுகளாக மத்திய அரசில் பணியாற்றி வருகிறார். 60 வயதான அருண் கோயலின் பதவி காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே, பணிக்காலம் நிறைவடைவதற்கு முன் அருண் கோயல் கடந்த 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளர் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். வெள்ளிக்கிழமை விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் சனிக்கிழமை (நவ.19) அருண் கோயலை இந்திய தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது. இந்த நியமன ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த திங்கங்கிழமை (நவ.21) இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையர்கள் குழுவின் அருண் கோயல் இடம்பெற்றுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா இடம்பெற்றுள்ள குழுவில் 3-வது நபராக அருண் கோயல் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்யப்பட்ட ஆணையை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது எவ்வாறு? நியமன நடைமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டன? நியமன ஆணை உள்ளிட்டவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

அருண் கோயலை இந்திய தேர்தல் ஆணையராக நியமித்ததில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளதா? நியமன நடைமுறைகள் சரிவர பின்பற்றப்பட்டதா? என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது 18ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில், அதே நாளில் புதிய தேர்தல் ஆணையர் பெயரை பிரதமர் அறிவிப்பதற்கான காரணம் என்ன என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மே 15 முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், அந்தகாலகட்டத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் ஏன் கேள்வி எழுப்பிய நீதிபதி அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? 4 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து அரசு வழக்குரைஞர் விளக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img