மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவது மத்திய மாநில அரசின் கடமை: ஜி.கே.வாசன்

Published:

GK_Vasan சென்னை: மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று குறிப்பிட்டுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உடனடியாக இவற்றை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல ஆண்டுகளாக பல கோரிக்கைகளை அறிவித்து, அரசாணையாக வெளியிடப்பட்டு நடைமுறைப் படுத்தாமல் இருக்கின்றன. மேலும் அவர்களது புதிய கோரிக்கைகளையும் அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. இந்தக் கோரிக்கைகள் ஐ.நா. சபையால் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பிரகடணத்தை உள்ளடக்கிய, 1995 ஆம் ஆண்டு இந்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கிய பி.டபிள்யூ.டி சட்டத்தில் ஏற்றுக் கொண்டு தமிழக சட்ட சபையிலும், பல துறையின் செயலாளர் ஆணைகளிலும் இடம் பெற்றுள்ள அரசாணைகளை நிறைவேற்றாமல் இருப்பதை நிறைவேற்ற வேண்டும். அதாவது, மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் வரையறுத்துள்ளபடி 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டிய மாநில ஒருங்கிணைப்பு குழு 4 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதனை முறையாக அமைத்து செயல்படுத்த வேண்டும். 2009 ஆம் ஆண்டில் இலவசக் கல்விச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகளுடைய குழந்தைகளை உள்ளடக்காமல் அமல்படுத்தியுள்ளதை மாற்றியமைத்து அவர்களையும் உள்ளடக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் செய்வதற்கு தனி வங்கி வசதியும், வீடு கட்டி ஒதுக்கும் போது வெளி ஒதுக்கீடாக 3 சதவீதம் வழங்கவும், பேருந்தில் ஒரே மாதிரியான இலவசக் கட்டணம் வழங்கவும், தனியார் துறையில் வேலை வாய்ப்பிற்கு முன்னுரிமை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கென்று தனி வாரியம் அமைத்தும், ரூ. 1 கோடி ஒதுக்கியும் கடந்த 2 ஆண்டுகள் முழுவதும் நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. அதனையும் முறைப்படுத்த வேண்டும். அவர்களுக்கென்று வடிவமைக்கப்பட்ட வண்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க ஆர்டிஓ அலுவலகத்தில் பரிசோதித்து பின்பு ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும். அவர்களுக்கு கல்வியிலும், கல்விக் கடனிலும் தனிச் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பிடபிள்யூடி சட்டத்தின் படி அவர்களுக்கு திருமணத் திட்டங்கள் அமைய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குறித்த தேசிய அளவிலான கொள்கைகள், திட்டங்கள், சட்டங்களை நிறைவேற்ற, முன்பு செயலில் இருந்த ஒருங்கிணைப்புக் குழு, மாநில செயல்பாட்டுக் குழு ஆகியவற்றையும், நல வாரியத்தையும் செயல்பட வைக்க வேண்டும். இனி வரும் காலங்களில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு, சம பங்கேற்பு அளிக்க செயல்திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில, மத்திய அரசாங்கத்தின் கடமை. என்று அவர் அதில் கூறியுள்ளார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img