பிழை இல்லாத வாக்காளர் பட்டியல்: தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

TN-assembly சென்னை: வாக்காளர் பட்டியலை பிழையில்லாமல் உருவாக்குவதற்காக தேசிய அளவிலான திட்டம் ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் அங்கீகரிப்புத் திட்டம் என்ற அந்தத் திட்டம் 3-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இருப்பவர்கள் தாமாக முன்வந்து அதை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். மேலும் அந்தத் திட்டத்தின்படி, வாக்காளர் பட்டியலில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான விண்ணப்பப் படிவங்களை கொடுக்க வாய்ப்பு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ஏப்ரல் 12-ந்தேதியில் இருந்து ஜூலை வரை ஒவ்வொரு மாதமும் ஒரு முகாம் நடத்தப்படும். அப்போது, வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பெயர் இருப்பவர்கள், அதை நீக்குவதற்காக 7-ம் எண் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும். தகவல்களை மாற்ற வேண்டும் என்றால் 8-ம் எண் படிவத்தை அளிக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள புகைப்படத்தை சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து மாற்றவேண்டும் என்றால் அதையும் கொடுக்கவேண்டும். இவற்றோடு, தேர்தல் சம்பந்தப்பட்ட தகவல்களை எதிர்காலத்தில் வாக்காளர்களுக்கு அளிப்பதற்கு வசதியாக, தங்கள் ஆதார் எண், தனது அல்லது குடும்பத்தினரின் செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை அனைத்து வாக்காளர்களும் அந்த முகாம்களுக்குச் சென்று கொடுக்க வேண்டும். எதிர்காலத்தில் ஆதார் எண் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் மாற்றம் செய்யப்படும். இந்த புதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் அரசியல் கட்சிகளின் உதவியையும் இந்திய தேர்தல் கமிஷன் நாடியுள்ளது. அதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனையையும் கேட்பதற்கு ஆணையம் முடிவு செய்துள்ளது. இதை ஒட்டி, இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடத்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அதன்படி, இன்று பகல் 12 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பகுஜன் சமாஜ் மற்றும் மாநில கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. தே.மு.தி.க. ஆகிய 9 கட்சிகள் கலந்து கொள்கின்றன.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories