1000838351 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடி திருவிழா கொடியேற்றம்..

சற்றுமுன்
1000838351 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டு தோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு கருட கொடியேற்றம் நடைபெற்றது.

1000838352 - 2026

முதல் நாளான இன்று இரவு ஆண்டாள் ரெங்கமன்னார் 16 வண்டி சப்பரத்தில் 4 ரத வீதிகளில் உலா வருகின்றனர். ஜூலை 24-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவையும், 26-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. 28-ம் தேதி காலை 9:05 மணிக்கு முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.

அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சர்ரகரையம்மாள் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப் பூரத் தேர் திருவிழா  மதுரை திருவண்ணாமலை சிதம்பரம் கோயில் திருவிழா போல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டு இன்று காலை கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள் முழங்க ஆகம முறைப்படி கொடி ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது

   இந்த திருவிழா காலங்களில் பதினாறு வண்டி சப்பரம், தங்கபல்லக்கு, சிம்மவாகனம், சேஷவாகனம், ஐந்து கருடசேவை, பெரிய அன்னவாகனம், யானைவாகனம், கண்ணாடி சப்பரம், பூ பல்லக்கு, குதிரை போன்ற வாகனங்களில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி இரவில் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆடிப் பூரத்தன்று 28.07.2025 திங்கட்கிழமை  நடைபெறுகிறது.
  இந்த திருவிழாவிற்காக பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு அலங்கார மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் தினமும் மதியம் 1 மணி முதல் இரவு 10 மணிவரை இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், சொற்பொழிவு, வீணை இன்னிசை, நடனம், ஆய்வரங்கம், பஜனை, வில்லிசை, நாமசங்கீர்த்தனம், வயலினிசை ஆகியவை நடைபெறுகிறது.  விழாவை முன்னிட்டு ஏராளமான போலிஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 11 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.