யாத்திரைக்கு எதிரான போராட்டம்: ஸ்டாலின் உள்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு

சற்றுமுன் தமிழகம்

m k stalin dmk - 2026

உத்தரபிரதேசத்தில் தொடங்கிய ராமராஜ்ய ரத யாத்திரை காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகா, கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலமான கேரளா உள்பட ஐந்து மாநிலங்கள் வழியாக எந்தவித பிரச்சனையும் இன்றி பயணித்தது.

ஆனால் நேற்று தமிழகத்தில் அந்த ரதம் நுழைந்தபோது திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. குறிப்பாக ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தலைமைச் செயலகம் அருகே மறியலில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் ஸ்டாலின் உள்பட 75 திமுக எம்எல்ஏக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி ஒன்று கூடுதல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.