மதசார்பின்மை, சோஷலிச வார்த்தைகள் விவகாரம்: சர்ச்சையிலிருந்து விலகியிருக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு

RSS Shakha மும்பை: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 1976ல் இந்திரா காந்தியால் சேர்க்கப்பட்ட மத சார்பின்மை, சோஷலிஸம் என்ற வார்த்தைகள் தற்போது குடியரசு தினத்தை ஒட்டி வெளியான அரசியலமைப்புச் சட்ட முகவுரை குறித்த விளம்பரத்தில் விடுபட்டு வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சர்ச்சைகளில் இருந்து விலகியிருக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்ட முகவுரையில் இருந்து மதச்சார்பின்மை, சோஷலிஸம் ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் எம்.பி., சஞ்சத் ராவுத் இந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். இந்நிலையில், இந்த சர்ச்சைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கருதுகிறது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது… “இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்து தகுதியானதாக இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. இந்த விவகாரத்தில் சர்ச்சையைக் கிளப்பி விவாதத்தில்  ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள், சரியான நோக்கத்துடனும் ஆழந்த விவரங்களோடும் ஈடுபடுகிறார்களா என்று எங்களுக்குத் தோன்றவில்லை. அப்படி இருக்கும் போது, இந்த சூழ்நிலையில் எதுவும் பேசாமல் இருப்பதுதான் சரியானது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறியுள்ளார். சிவசேனா எம்பி., சஞ்சய் ராவுத் இது குறித்துக் கூறிய போது, “இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு கிடையாது. பாகிஸ்தான் இஸ்லாம் நாடு என்று இருக்கும்போது, இந்தியா ஹிந்து நாடாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கூறும் ஹிந்து ராஷ்டிரத்தை ஒட்டி வந்தாலும், சிவசேனாவின் இந்த வார்த்தைக் கட்டுமானத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்கவில்லை. தாங்கள் கூறும் ஹிந்து ராஷ்ட்ரம் என்ற கொள்கை சிவசேனாவின் கருத்தில் இருந்து வேறுபட்டது என்று கூறுகிறது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் கூறியபோது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை புகுத்தப்படுவதற்கு முன்பும் பின்பும் ஆர்.எஸ்.எஸ் இதையே வலியுறுத்தி வருகிறது. அனைத்து மதங்களின் பாலும் இந்திய சமூகத்துக்கு ஒரு சகிப்புத் தன்மை இருந்து வருகிறது. சிவசேனா என்ன கூறுகிறதோ அது மிகவும் தீவிரமாக விவாதிக்கப் பட வேண்டிய ஒன்றல்ல. எனவே அதனை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றார். இந்நிலையில், மோடி அரசை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் நடவடிக்கையில் சிவசேனா ஈடுபட்டுள்ளதாகவே கருத இடமிருப்பதாக ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்தக் கருத்தானது, நரேந்திர மோடி அரசுக்கு உள்ள கவுரவத்தை இந்த விவாதமானது குலைத்து விடும் என்று தெரிவிப்பதாகவே உள்ளது. இந்நிலையில், அரசின் விளக்கத்தை ஆர்.எஸ்.எஸ். மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories