பி.இ.: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

10 July05 COUNSELLING - 2026பி.இ. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வை இன்று தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1,76,865 பி.இ. இடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இதற்கு விண்ணப்பித்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களில் தகுதிபெற்ற 1,04,453 பேருக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த முறை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன் -லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம். வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களில், கட்டணம் ஏதுமின்றி கலந்தாய்வில் பங்கேற்கலாம். எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 10 -ஆம் தேதி நிறைவடைந்த பின்னர், பி.இ. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வை முன்கூட்டியே இன்று தொடங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு ஆன்-லைன் முறையில் அல்லாமல், ஏற்கெனவே உள்ள நடைமுறையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமே நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவிக்கையில், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடத்தப்பட உள்ளது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். இவர்களுக்கென 6,000-த்துக்கும் அதிமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் 200 -க்கும் குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளனர். எனவே, விண்ணப்பித்த அனைவரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் நாளான நாளை, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கென 150 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் பங்கேற்க 300 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை மறுநாள், விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும். இவர்களுக்கு 500 இடங்கள் ஒதுக்கப்படும். இதில் பங்கேற்க 750 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து எடுத்து வருவதுடன், கட்டணத்துக்கான வரைவோலையையும் எடுத்து வரவேண்டும் என்றார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories