திருடன் என நினைத்து தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் உயிரிழப்பு! மனிதாபிமானமற்ற கொடூரம்!

Published:

NorthIndian guy attacked by locals - 2026

சிதம்பரம்: சிதம்பரத்தில் திருடன் என நினைத்து பொதுமக்களால் தாக்கப்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் காசுகடைத் தெருவில் 30 வயது மதிக்கத்தக்க வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்று நீண்ட நேரமாக அங்கும் இங்குமாக சுற்றி வந்தார். மேலும், ஒவ்வொரு வீட்டின் முன் நிற்பதும், பின்னர் செல்வதுமாக இருந்த அந்த நபர், திடீரென அந்த தெருவில் நின்றிருந்த ஒரு காரின் கதவை பிடித்து இழுத்துள்ளார். இதைப் பார்த்தவர்கள் கார் உரிமையாளரிடம் கூறினர்.

ஆத்திரமடைந்த அவர், வடமாநில இளைஞரைத் தாக்கினார். அந்த நபர் இந்தியில் பேசியது புரியாத நிலையில், அங்கே கூடிய பொதுமக்களும் சரமாரியாகத் தாக்கினர். கட்டி வைத்தும் உதைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளைஞரை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அந்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி., பாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். சிதம்பரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்த இளைஞர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்தும், அவரை அடித்துக் கொலை செய்தது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இதனால், அப்பகுதி மக்கள் ஏராளமானோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img