திருவாரூருக்கு தேறுதலே தேவை; மீட்டெடுப்பே தேவை: ‘தமிழ்’இசை சௌந்தர்ராஜன்!

சற்றுமுன் சென்னை தமிழகம் திருச்சி
tamilisai soundarrajan - 2026
File copy

திருவாரூருக்கு தேர்தல் தேவையில்லை; தேறுதலே தேவை! வாக்கெடுப்பு தேவையில்லை; மீட்டெடுப்பே தேவை! என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். மேலும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதை வரவேற்று தனது டிவிட்டர் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில்…

திருவாரூர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது! புயலுக்குப் பின்பு அங்கே தங்கி மருத்துவ நிவாரணப் பணி செய்த அனுபவத்தில் சொல்கிறேன்… திருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான், தேர்தல் அல்ல, அவர்கள் வாழ்வை மீட்டெடுப்பதுதான் தேவை ஓட்டெடுப்பு அல்ல, தேர்தல் ஆணையத்திற்கு நன்றி,.. என்று கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று பாஜக., அலுவலகத்தில் நடைபெற்ற உயர் நிலைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க தீர்மானிக்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.