துவக்கி வெச்ச சகாயம்… என்ன தூங்கிக்கிட்டா இருந்தாரு?

உரத்த சிந்தனை சற்றுமுன் சென்னை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
sahayam ias in loyola college - 2026

சென்னை: லயோலா கல்லூரியில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதில் இடம் பெற்ற ஓவியங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து லயோலா கல்லூரி நிர்வாகமே தவறுகளைக் குறிப்பிட்டு, அது தவறுகள் தான் என்று உறுதியாகக் கூறி, அது தங்கள் பார்வையில் படாமல் நடந்துவிட்டது என்று கூறி வருத்தம் தெரிவித்தது.

ஆனால், இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, அனைத்தையும் பார்வையிட்டவர், அரசு அதிகாரியான சகாயம் ஐ.ஏ.எஸ். அரசு குறித்த விமர்சனங்கள், அரசின் திட்டங்கள் குறித்த மோசமான அவதூறுகள், நாட்டின் பிரதமர், நாட்டின் தேசிய சின்னங்கள் என அனைத்தையும் விமர்சித்துள்ள ஓவியங்களைப் பார்த்து ரசித்தபடி சென்ற சகாயத்துக்கு அப்போதே அவற்றைக் குறித்து சொல்லத் தோன்றவில்லையா என்று விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.

எனவே, சகாயம் ஐ.ஏ.எஸ். மீது அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இது குறித்து இந்து இயக்கங்களைச் சேர்ந்த ஒருவர் பகிர்ந்து கொண்ட கருத்து… “ இவங்களுக்குத் தெரியாமல் misuse பண்ணிட்டதாகவும், பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை, தேசிய உணர்வுகளை அவமதிக்கும் விதமாக இருந்தது தெரிய வந்தவுடன் படங்கள் நீக்கப்பட்டதாகவும் சொல்லி மன்னிப்பு கேட்டிருக்கு லயோலா கலை மற்றும் இலக்கியப் பிரிவு.

மன்னிப்பு கேட்டது சரி… இரண்டு நாட்களாக அங்க என்ன இருந்தது-னு இவங்களுக்கு தெரியாதா” அந்த சகாயம் இந்த நிகழ்ச்சியை துவக்கி வெச்சுட்டு எதையும் பாக்காம கண்ணை மூடிக்கிட்டு கிளம்பிப் போய்ட்டாரா? இதையெல்லாம் நாம நம்பணுமா?.. இவங்க நம்மை என்ன-னு நினைச்சுட்டிருக்காங்க?.. என்று ஆவேசப் படுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.