சென்னை: சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தேவையற்றது என்றும், அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் குழந்தைகளுக்கு எந்தவித சுணக்கமும் ஏற்படாமல் மதிய உணவு வழங்கப்படுகிறது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் மாற்று ஊழியர்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு தயாரித்து வழங்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட் செய்திக்குறிப்பில்… சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின்கீழ் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் முதலாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மொத்தம் 54.63 லட்சம் குழந்தைகளுக்கு 42 ஆயிரத்து 619 சத்துணவு மையங்கள் மூலமாக சுவையான கலவை சாதம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கென ஒரு லட்சத்து 28 ஆயிரம் பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இந்த அரசு இவர்களுக்கென பல சலுகைகளை நிறைவாக அளித்து வருகிறது. இத்திட்டத்திற்காக 2014-15-ம் ஆண்டில் ரூ.1,412.88 கோடி வழங்கப்பட்டுள்ளது. சத்துணவு ஊழியர் சங்கம் ஒன்று, 15-ந் தேதி முதல் (நேற்று முதல்) காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சங்கம் உட்பட மேலும் 11 சத்துணவு ஊழியர் சங்கங்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்பட்டு தகுந்த ஆணைகள் வெளியிடுவதாக உறுதியளிக்கப்பட்டது. அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அறிக்கை அளித்தனர். அதன் பின்னரும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தலைமையிலான பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். எனவே அரசு இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மூலமும் இதர அரசு அலுவலர்கள் மூலமும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. அதன்படி மாவட்டங்களில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களும் 15-ந் தேதி திறக்கப்பட்டு, சத்துணவு சமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பு தேர்வுகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மற்ற வகுப்பு குழந்தைகளுக்கும் ருசியான கலவை சாதம் வழங்கும் பணி தொடருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்பட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரால் தொடங்கப்பட்ட போராட்டம் தேவையற்றது. அரசால் எடுக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் திட்ட செயல்பாட்டில் எவ்வித சுணக்கமும் இன்றி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது – என்று கூறப்பட்டுள்ளது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
கட்டுரைகள்
மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!
நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
இந்தியா
சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!
ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம். மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது. தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

Topics

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!
ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம், பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சினி நியூஸ்
திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.