December 6, 2025, 8:47 AM
23.8 C
Chennai

கருணாநிதி போல் செத்தவரைக் குறிப்பிட்டு புளுகாததால்… சிக்கலில் மாட்டிய திமுக.,வினர்! சாயம் வெளுத்த ஸ்டாலின் கதை!

stalin dmk 2 - 2025அடேய் திமுக திருடர்களா.. ஈவேரா கருணாநிதி காலத்தில் புளுகி எழுதின கதைகளை இன்னுமாடா வெட்கமே இல்லாமல் தொடர்ந்து அப்படியே செய்வீங்க..?

(ரோமிங் ராமன்) ஜி தன் டிவிட்டர் மூலம் நீங்க தொளபதியை உயர்த்திப் பேசியதாகச் சொன்ன ஜான் எலாஸனை தொடர்பு கொண்டு ஒரே நிமிஷத்தில் உங்க தொளபதியின் கதையை கந்தலாக்கிட்டாரே..!

யார் என்றே தெரியாது, நான் எந்த பாராட்டுகளையும் தெரிவிக்கவில்லை என ஐநா சபையின் முன்னாள் துனை பொது செயலாளார் ஜேன் ஏலிசன் டீவிட்டரில் பதிலளித்துள்ளார். திமுக திருட்டு கொத்தடிமைகளும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் ஊடக பொறுக்கிகளுக்கு இது சமட்டி அடி!

  • இப்படி ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார்கள் சிலர் தங்களது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பதிவுகளில்.

அப்படி என்ன விவகாரம் இது என்று பார்த்த போது… ஒருவர், அடேங்கப்பா, இந்த பதிவுக்கு 1000 ரூபாயே தரலாமே…. – என்று குறிப்பிட்டிருந்தார்.

திமுக., முன்னாள் தலைவர் மு.கருணாநிதி, தான் எப்போது ஒருவரைப் பற்றிக் குறிப்பிட்டாலும், அந்த நபர் உயிரோடு இல்லாதவர்தானா என்று பார்த்துதான் குறிப்பிடுவார். தன்னைக் குறித்து அந்த நபர் பெரிதும் புகழ்ந்திருக்கிறார், என்னை உச்சத்தில் தூக்கிவைத்துக் கொண்டாடினார் என்றெல்லாம் குறிப்பிட்டு, கைத்தட்டல் பெறுவார். அதோடு, இறந்துபோனவர்கள் தன் கனவில் வந்து, ஏதாவது ஒரு விவகாரத்தில் கருத்து சொல்லியோ, பாராட்டியோ மகிழ்ந்தார்கள் என்று அவிழ்த்து விடுவார். கடந்த மூன்று தலைமுறை தமிழர்கள் இத்தகைய புளுகு மூட்டைகளைக் கேட்டே அறிவை அடமானம் வைத்து வளர்ந்தார்கள்.

இப்போது, திமுக., தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் குறித்த கதைகளை எழுதி வரும் ரூ.200 எழுத்தாளர்கள், தங்களுக்குக் கொடுத்த அசைன்மெண்ட்டை மீறி, ரூ.1000 கொடுக்குமளவுக்கு உயிரோடு இருப்பவர்களை குறிப்பிட்டே கதை அவிழ்த்து விடுகிறார்கள் என்று கிண்டல் செய்கிறார்கள் சமூக ஊடகங்களில்.

இதற்குக் காரணமான கருத்துப் பரவலும், பதிலடியும்…

நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் தளபதியும் ஒருவர்! தொடர்ந்து ஒரு மணி நேரம் என்னிடம் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசினார்! அவரின் நீண்ட கால அரசியல் திட்டங்கள் குறித்த அவரின் பேச்சுகளை நானே தனிப்பட்ட முறையில் குறிப்பு எடுத்து அதனை இன்றுவரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். இப்படிப்பட்ட ஒரு தலைவர் மற்ற நாடுகளில் இருந்து இருந்தால் அவரை உலகமே தூக்கி வைத்துக் கொண்டாடி இருக்கும்.

(ஐநா முன்னாள் துணை பொது செயலாளர் ஜான் எலியாசன் எழுதிய நான் வியந்த உலகத் தலைவர்கள் புத்தகத்தின் பக்கம் 372)

  • என்று ஒரு தகவல் பதியப்பட்டு திமுகவினரால் சுற்றுக்கு விடப்பட்டது. இந்தத் தகவலைக் கண்டு பலரும் காறித் துப்பி வருகிறார்கள்!

stalin dmk 1 - 2025காரணம் இந்தத் தகவல் கொண்ட படத்தை டேக் செய்து ரோமிங் ராமன் என்பவர் ஜான் எலியசனுக்கு ட்விட்டரில் கேள்வி கேட்டு பதிவிட்டிருந்தார்!

மதிப்பிற்குரிய ஐயா! இது உண்மையான தகவல் தானா? இந்தியா தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி திரு எம் கே ஸ்டாலின் என்பவர் குறித்து உங்கள் புத்தகத்தில் பதிவு உள்ளதா? உங்களது பொன்னான நேரத்தை நான் எடுத்துக் கொள்வதற்கு மன்னிக்கவும்! காரணம் இது மிக அதிக அளவில் பரவுகின்றது. உங்களுக்கு தேவைப்பட்டால் இதுகுறித்து மொழிபெயர்ப்புகளை நான் எடுத்து அனுப்புகிறேன்’ – என்று அவர் ஜான் எலியாசனிடம் ட்விட்டர் பதிவில் கேட்டிருந்தார்!

அதற்கு பதில் அளித்த ஜான் எலியாசன், ‘இது மிகவும் தவறு! நான் இப்படிப்பட்ட  நபர் குறித்து கேள்விப்பட்டதே இல்லை! இது மிகவும் பொய்யான தகவல்’ என்று பதிலளித்திருக்கிறார்!

stalin dmk jan eliasson - 2025அதற்கு ரோமிங் ராமன் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிலும் அனுப்பி இருந்தார்!

ஆனால், ஜான் எலியாசனுடன் திமுக., தலைவர் ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் இருப்பது போன்ற படம் இருக்கும் போது, அதை வேண்டுமென்றே போட்டோஷாப் செய்து வெளியிட வேண்டிய தேவையிருக்காது; எனவே இது உண்மையான படம் தான்! எனவே ஜான் எலியாசன் அப்படி குறிப்பிட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது என்று சிலர் பதிலளிக்க, இது ஏதோ ஒரு நிகழ்வில் அப்படியே நின்று போட்டொ எடுக்கப் பட்டிருக்கலாம்! யார் யாருடனோ சிலர் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். ஆனால் அப்படி நிற்கும் அனைவர் குறித்தும் அவர்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படித்தான் இங்கும் நிகழ்ந்திருக்கும். ஆனால், போட்டோ ஒன்றை வைத்தே, திமுக.,வினர் ஒரு கதையை ரெடி செய்து பரப்பியிருக்கிறார்கள் என்று கருத்துப் பதிவிட்டுள்ளனர் சிலர்.

இந்தப் பதிவுகள் இப்போது டிவிட்டரில் வேகமாகப் பரவி வருகின்றன. அதிகம் பேர் இதற்கு கருத்தும் பதிவிட்டு வருகிறார்கள்.

இது குறித்து ரோமிங் ராமன் தனது டிவிட்டர் பதிவில், இதனால் என் டிவிட்டர் ஐடி முடக்கப் படுமோ என்று கேள்வி எழுப்பியுள்ளது.. இந்த விவகாரத்தின் ஹைலைட்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories