இன்று விற்பனைக்கு வருகிறது ரெட்மி கே20, ரெட்மி கே20 புரோ

redmi k20 - 2026

சியோமி நிறுவனம் தற்போது புதிதாக ரெட்மி கே20 மற்றும் கே 20 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நாளை இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. இதிலுள்ள அடிப்படை சிறப்பம்சங்கள், ஆஃபர்கள் பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

ரெட்மி கே20: ரெட்மி கே 20 ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை 21,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசசர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 6.39 இன்ச் அமோலெட் திரை, கொரிலா கிளாஸ் 5 உள்ளது. பின்பக்கத்தில் ட்ரிப்பிள் கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

48MP + 13MP + 8MP ஆகிய மெகா பிக்சலுடன் பின்பக்கத்தில் கேமரா உள்ளது. செல்பிக்காக 20 மெகா பிக்சல் பாப்-அப் கேமரா தனியாக உள்ளது. மேலும், இன்-டிஸ்ப்ளே விரல் ரேகை சென்சார், 18W ஃபாஸ்ட் சார்ஜ், 4000 mAh பேட்டரி சக்தி, 3.5 mm ஹெட்போன் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம்,64ஜிபி மெமரி வேரியண்டின் விலை 21,999 ரூபாய் என்றும், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 23,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

ரெட்மி கே20 புரோ: ரெட்மி கே 20 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 27,999 ரூபாயாகும். இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசசர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 6.39 இன்ச் அமோலெட் திரை உள்ளது. பின்பக்கத்தில் ட்ரிப்பிள் கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

48MP + 13MP + 8MP ஆகிய மெகா பிக்சலுடன் பின்பக்கத்தில் கேமரா உள்ளது. செல்பிக்காக 20 மெகா பிக்சல் பாப்-அப் கேமரா தனியாக உள்ளது. மேலும், இன்-டிஸ்ப்ளே விரல் ரேகை சென்சார், 27W ஃபாஸ்ட் சார்ஜ், 4000 mAh பேட்டரி சக்தி, 3.5 mm ஹெட்போன் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம்,128ஜிபி மெமரி வேரியண்டின் விலை 27,999 ரூபாய் என்றும், 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 30,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12 மணிக்கு ரெட்மி கே20, ரெட்மி கே 20 ப்ரோ இரண்டு ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் இதனை பிளிப்கார்ட் மற்றும் எம்.ஐ ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கலாம். ஐசிஐஐ வங்கி மூலமாக இந்த ஸ்மார்ட்போன்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 2,000 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories