முல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…

Published:

mullai

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்கள் முழுவதும் அவரின் புகைப்படம் வலம் வந்தது. ஏனெனில், முல்லை கதாபாத்திரத்தில் அந்த அளவுக்கு சித்ரா நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

தற்போது அவர் இறந்துவிட்டதால் அவருக்கு பதில் யார் அதில் நடிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. மேலும், சின்னத்திரை நடிகை சரண்யா அவர் வேடத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் பரவியது. ஆனால் அதை அவர் மறுத்தார்.

chitra

இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தை முடிவுக்கு கொண்டு வர கிரியேட்டிவ் டீம் முடிவு செய்துவிட்டதாம். அவரது கதாபாத்திரம் இறந்துவிட்டது போல் காட்சியை அமைக்க திட்டமிட்டுள்ளனராம். இன்னும் சில நாட்களில் இது தெரிந்துவிடும்.

முல்லை வேடத்தில் சித்ராவை விட யாரும் சிறப்பாக நடிக்க வாய்ப்பில்லை என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img