rahi idli
rahi idli

ராகி இட்லி

தேவையான பொருட்கள்:

ராகி மாவு (கேழ்வரகு மாவு) – 400 கிராம், உளுந்து – 100 கிராம்,

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப


செய்முறை:

உளுந்து, வெந்தயம் இரண்டையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவிட்டு மிக்ஸியில் மையாக அரைத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் ராகி மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டுக் கலந்துகொள்ளவும்.

இதனுடன் அரைத்த உளுந்து மாவுக் கலவையையும் சேர்க்கவும். கூடவே தேவையான உப்பு போட்டு இட்லி மாவைவிடச் சற்று கெட்டிப் பதத்தில் கரைத்துக்கொள்ளவும். மாவை ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு இட்லிகளாக வார்த்தெடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending