மூல நோய் தீர.. இத ட்ரை பண்ணுங்க..!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
pdi karunai
pdi karunai

பிடிகருணை மசியல்

தேவையான பொருட்கள்:
பிடிகருணை – 4
இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பொட்டுக்கடலை – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை ,
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), பெருங்காயத்தூள் – சிறிதளவு, எலுமிச்சைப்பழம் – ஒன்று,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: கருணைக்கிழங்கை நன்கு கழுவி குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். பின்னர் கிழங்கு ஆறியதும் அதன் தோலை உரித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கவும். அதில் கடுகு, பொட்டுக்கடலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இதனுடன் வேகவைத்த கருணைக்கிழங்கையும் மசித்துப் போட்டு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளறவும். கடைசியாகப் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும். பின்னர் எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து நன்றாகக் கிளறிவிட்டு இறக்கவும்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

குறிப்பு: எலுமிச்சைப்பழத்துக்குப் பதில் புளி கரைத்துவிட்டும் கொதிக்கவிடலாம். கருணைக்கிழங்கு மூல நோயிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.