ஆரோக்கியமும், சுவையும் சேர்ந்த சோயா உருண்டை சுண்டல்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
soya urundai sundal
soya urundai sundal

சோயா உருண்டை சுண்டல்

தேவையான பொருட்கள்:
சோயா உருண்டை (சோயா சங்க்ஸ்) – 10, முளைகட்டிய கொள்ளு,
சோளம் – ஒரு தலா ஒரு கைப்பிடி அளவு, வெள்ளரிக்காய் (பொடியாக நறுக்கியது) – ஒரு சிறிய கிண்ணம்,
கேரட் (பொடியாக நறுக்கியது) – ஒரு சிறிய கிண்ணம்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மாங்காய் (பொடியாக நறுக்கியது) – ஒரு சிறிய கிண்ணம்,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சோயா உருண்டைகளைச் வெந்நீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வைக்கவும். பின்னர் நீரை வடித்துப் பிழிந்துகொள்ளவும். பிழிந்துவைத்திருக்கும் சோயாவைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். முளைகட்டிய சோளம், கொள்ளு இரண்டையும் குக்கரில் சேர்த்து, ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு விசில்விட்டு இறக்கவும். பின்னர் இதிலிருக்கும் நீரை வடித்துவைக்கவும்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, நறுக்கிய சோயா உருண்டைகளைப் போட்டு வதக்கவும். பின்னர் இதனுடன் வேகவைத்த கொள்ளு, சோளத்தைச் சேர்க்கவும். பிறகு நறுக்கிய கேரட், வெள்ளரித் துண்டுகள், மாங்காய்த் துண்டுகள், சிறிதளவு உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறிவிடவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து இறக்கவும்.

குறிப்பு: கொள்ளு, சோளம் மட்டுமல்லாமல், உங்களுக்கு விருப்பமான பயிறு வகைகளைச் சேர்த்து இதே முறையில் சுண்டல் தயாரிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.