
கொரோனா பரவல் நெருக்கடி காரணமாக அனைவரையும் மாஸ்க் அணிந்து வரும்படி பொது இடங்களில் அரசு கட்டாய படுத்தி வருகிறது. மாஸ்க் அணியாமல் செல்லும் போதும் அங்கங்கே நிறுத்தி சில இடங்களில் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் புழங்கும் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது!
பலசரக்குக் கடைகள் வணிக வளாகங்கள் இவற்றுக்கு செல்லும்போதும் மாஸ்க் அணியாவிட்டால் பொருள்களை வழங்க கூடாது என்று கட்டாயப் படுத்தும் உள்ளூர் நிர்வாகம் களும் உண்டு
இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நுழைவதற்கு தீடீரென கட்டுப்பாடு கடுமையானது. மாஸ்க் அணிந்து வர, அனைவரையும் வற்புறுத்தினர்.
- செய்தி : ரவிச்சந்திரன், மதுரை