ஜெ., அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்!

Published:

j anbazhagan
j anbazhagan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ ஜெ அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது 

கொரோனா தொற்று அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி அனுமதிக்கப்பட்டார் எம்.எல்.ஏ., ஜெ அன்பழகன். அப்போது அவருக்கு கடும் மூச்சுத் திணறல் இருந்ததாக மருத்துவமனை தகவல் வெளியிட்டிருந்தது.

தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று தெரியவந்தது. அவருக்கு கடும் மூச்சுத்திணறல் இருந்ததால் 90 சதவிகிதம் ஆக்சிஜன் அவருக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் உடல் நலம் சிறிது சிறிதாக தேறி வருவதாகவும் தற்போது 40 சதவீதம் ஆக்ஸிஜன் தேவைப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

இந்நிலையில் இன்று மாலை மருத்துவமனை வெளியிட்ட தகவலில் மாலை நேரத்திற்கு பிறகு அவரது இதயத்துடிப்பு மோசமான சூழ்நிலையில் இருப்பதாகவும் சிறுநீரகங்கள் செயல்பாடு அபாயகரமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!
anbazhagan condition
anbazhagan condition

திமுக மாவட்டச் செயலரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்; சற்றே தேறிவந்த நிலையில் உடல் நிலை மீண்டும் மோசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கிறது மருத்துவமனை நிர்வாகம்

Related articles

Recent articles

spot_img