
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் பொருட்டு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழக அரசின் சார்பில் வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், மருத்துவர் திரு.நிர்மல்குமார் வழங்கிய ஹோமியோபதி மாத்திரைகள் அடங்கிய மருத்துவ தொகுப்பினை வருவாய் , நிர்வாக சீர்திருத்த ஆணையர் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி திரு. ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கினார்.
இவை தேவைப்படும் ஊடகவியலாளர்கள் பத்திரிகையாளர் மன்ற மேலாளரை தொடர்பு கொண்டு காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார் சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதி தமிழன்.
அதன்படி பத்திரிகையாளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, மருத்துவ தொகுப்பினைப் பெற்றுக் கொண்டார்கள்.