health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தலைவலி, ஏப்பம், மூலம், பாதவெடிப்பு, மலச்சிக்கல்..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

அடிக்கடி ஏப்பம் வருகிறதா?

பாகல் இலையை நசுக்கி சாறெடுத்து ஒரு கரண்டி சாற்றில் சிறிது மஞ்சள்தூளைக் கலந்து சாப்பிட ஏப்பம் வருவது நின்று விடும். வாயுத் தொல்லை தீரும்.

முருங்கைக் கீரையின் மேன்மை

முருங்கைக் கீரையில் வைட்டமின் ‘ஏ’ வைட்டமின் ‘சி’ அதிக அளவு உள்ளது. கால்சியச் சத்தும் நிரம்ப உள்ளது. ஒரு கப் முருங்கைக் கீரையின் சாறு எட்டு கப் பசும்பாலுக்கு சமம். ஆறு ஆரஞ்சுப் பழத்திற்கு சமம். எட்டு வாழைப் பழங்களுக்குச் சமம். இரண்டரை கிலோ மாம்பழத்திற்கு சமம். அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிட ஆரோக்கியமாக வாழலாம்.

பாதங்களில் வெடிப்பா?

அரசமரத்தின் அடிப்பகுதியில் ஒரு கத்தியால் கீறினால் பால் வடியும். அந்தப் பாலை வழித்து பித்த வெடிப்புகளில் தடவி வர வெடிப்பு மறையும்.

மூலநோய், மலச்சிக்கலா?

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு அநேகமாக மூல நோய் வரும். காசினிக் கீரையுடன் அதிக அளவு வெங்காயம் சேர்த்துச் சமைத்து உண்ண மூல நோய் தொந்தரவு கொடுக்காது.

தலைவலியா?

ஒரு கப் காப்பியில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு விட்டு சுடச்சுட சாப்பிட தலைவலி பறந்தே போகும்.

பச்சைக் கொண்டைக் கடலையை வெந்நீர் விட்டு அரைத்து நெற்றிப் பொட்டில் தடவ தலைவலி மறையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.