குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய்க் குளியலுக்குத் தடை: தூய்மையாகக் காட்சி தரும் அருவிக் கரை!

குற்றாலத்தில் இப்போது குளிக்க வருபவர்கள், சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சிகைக்காய் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் எண்ணெய்க் குளியல்தான் குற்றாலத்தில் சிறப்பாக இருக்கும். தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அருவியில் நின்றால், சிகைக்கால், ஷாம்பு போடாமலே தலையில் வைத்த எண்ணெய் காணாமல் போய் விடும்.
எண்ணெய் மாலிஷ் செய்து விடுவதற்கென்றே சிலர் அருவிக் கரைக்கு வெளியே அமர்ந்திருப்பார்கள். இப்போது அந்தக் காட்சிகளை எல்லாம் காண முடியாது. ஆனால்… அருவிக் கரை மிகத்தூய்மையாக உள்ளது. தண்ணீர் அதே தெளிவுடன் செல்கிறது. அருவி விழுந்து நீர் ஓடும் ஓடையில், பிளாஸ்டிக் கழிவு அடைப்புகள் இல்லாமல் நீர் சலசலத்து ஓடுகிறது.
ஆனாலும், வியாபாரிகள் அலுத்துக் கொள்கிறார்கள். கூட்டம் இல்லை… நீதிமன்ற உத்தரவு இப்படியா இருக்க வேண்டும்? குற்றாலக் குளியல் என்றாலே எண்ணெய்தானே! மூலிகை எண்ணெய் தேய்த்து குளிக்கத்தானே குற்றாலம் வருகிறார்கள்… – இவ்வாறாக!~
திங்கள் அன்று குளிக்கச் சென்றேன். கூட்டம் ஓரளவு இருந்தது. நெருக்கியடிக்கும் நிலை இல்லை என்றாலும், அருவிக்கு அருகில் ஒரே தள்ளுமுள்ளு. ஆனால், அருவி நீர் நன்றாக விழும் நடுப் பகுதியில் நெருக்குதல் இன்றி, நன்றாகக் குளிக்கும் வகையில் இருந்தது.
முன்பெல்லாம் அருவி நீர் விழுகிறதோ இல்லையோ… ஒவ்வொருவர் உடலிலும் தேய்த்திருக்கும் எண்ணெய்ப் பிசுக்கை நம் உடலில் இழுவி விட்டுச் செல்வார்கள்… இப்போது அப்படி இல்லை என்றாலும், நெருக்கியடித்தலின் போதான வாடை… குறிப்பாக டாஸ்மாக் சரக்கு நெடி.. குமட்டத்தான் செய்கிறது. இத்தனைக்கும் அருவியிருக்கும் இடத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு டாஸ்மாக் கடைகளை மாற்றி விட்டார்களாம்.. இருந்தாலும் தண்ணி போடாமல் தண்ணியில் தலை காட்ட ஏன் இந்தக் குடிமகன்களுக்கு ஞானம் வர மறுக்கிறதோ தெரியவில்லை!
தமிழகம் தரம் தாழ்ந்து போவதற்கு, அளவுக்கு அதிகமான சரக்கு விற்பனை ஒரு காரணமாக அமையக் கூடும்!

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!
senkottai2 - 2026

courtallam1 - 2026

courtallam2 - 2026

courtallam3 - 2026

courtallam4 - 2026

courtallam5 - 2026

courtallam6 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories