ஆசிரியர்கள் எனும் ஆச்சர்யம்…

இலக்கியம் கவிதைகள் லைஃப் ஸ்டைல்

teacher - 2026

அறியாததை அறிந்தும்
தெரியாததை தெரிந்தும்
புரியாததை புரிந்தும்
போதிக்கும் போதிமரங்கள் …

ஆசையாய் தேர்ந்தெடுத்த பணியில்
ஆயிரமாயிரம் கட்டுப்பாடுகள் என்றாலும்
அன்போடு ஏற்கும் ஆச்சர்யங்கள்…

இன்னல்களையே எடுத்துக் கொண்டு
இன்பத்தையே இயல்பாய் தரும்…

ஈடுபாட்டையும் ஈர்க்கும் வகையில்
இசையாய்த் (இசையத்) தரும்….

உலகம் உய்யவே உண்மை உணர்த்தவே
உணர்வுகளின் உருவாய் உபதேசிக்கும் …

ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்து
உதவாதவனாய் வீட்டில் இருந்து
ஊணக் கண்களுக்கும் ஒளி தந்து
ஊமையாய் நிர்வாகத்திடம் பணிந்து நிற்கும்….

என்ன ? எங்கே ? எப்போது? எப்படி ?
என்பதற்கெல்லாம்
விடையாய் விளங்கும் விளக்குகள்…

ஏன் ? என்பதற்கெல்லாம் பதில் தந்து
எளியோரையும் ஏற்றி விட்டு ஏணிகளாய் இருந்தும்
ஏங்காமல் ஏறாமல் நிற்கும் …..

ஐயங்களுக்களை எல்லாம் அகற்றியும்
ஐயகோ என சிலர் கண்டு தவித்தும்
ஐ என ஆச்சர்யம் அடைந்தும்
ஐயாவாய் ஐயனாய் ஐந்தவித்தானாய் ….

ஒன்று முதல் ஓராயிரம் இடையூறுகள் என்றாலும்
ஒதுங்காது கற்பித்தலையே கடவுளாய் காணும்….

ஓதுவதை ஒரு தொழிலாய் ஏற்காமல்
ஓங்காரம் இசைப்பதாய் எண்ணி
ஓயாமல் உழைக்கும்….

ஔவையாய் வள்ளுவனாய் பாரதியாய் கம்பனாய்
ஒவ்வொரு நாளும் வேடம் புனணந்தும் புணையா
ஓவியமாய் விளங்கும்….

ஆசிரியனாய் …
பெருமை கொள்ளும்

– குச்சனூர் கோவிந்தராஜன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.